Latest News

September 25, 2012

புதிய போராட்டம்: இம்முறை புலிகள் பெயரில் அல்ல !
by admin - 0


இலங்கையில் 33 வருடப் போராட்டம் 2009ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என கேணல் ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய சமாதானப்படையின், உளவுப் பிரிவின் தலைவராக இருந்த கேணல் ஹரிகரன் அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நன்கு அறிந்துவைத்திருக்கும் நபர்களில் ஒருவராவர். பிரபாகரன் அவர்களின் நகர்வுகள் அனைத்தையும் அவர் துல்லியமாக ஆராய்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இந்திய இணையச் செய்தி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் இன்னமும் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலை நீடித்தால், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் வெடிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள கேணல் ஹரிகரன் அவர்கள், இம் முறை புலிகளின் பிற அணிகள் பிறிதொரு பெயரில் போரட்டத்தை ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச நாடுகள் பல விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுள்ள இவ்வேளை, அப்பெயரைத் தவிர்த்து, சர்வதேச அணுசரனை பெற்று, போராட்டத்தை முன்நகர்த ஒரு அணி தயாராகலாம் என்ற பொருளில் அவர் தனது கருத்தை மறைமுகமாக வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவு, தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் இலங்கையில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனை சமீபத்தில், BBC மற்றும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகள் சிலவும் செய்தியாக வெளியிட்டுள்ளது. முன்நாள் போராளிகள், மற்றும் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் படையில் அங்கம் வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், தமது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இவர்களின் விபரங்களைத் திரட்டிவரும் இராணுவத்தினர், பல பெண்களை மிரட்டி தமது பாலியல் தேவைகளுக்காக அவர்களப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகு

« PREV
NEXT »

No comments