Latest News

September 07, 2012

பசில் ராஜபக்ச! நாட்டை விட்டு ஓட்டம்
by admin - 0

கிழக்கு மாகாண சபை தேர்தல்
பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச
சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச
குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது. பதிலுக்கு பசில் ராஜபக்சவும்
தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச அநாவசியத்
தலையீடுகளை மேற்கொள்கிறார் என
கோபித்துக்குக் கொண்டுள்ளாராம். இதன் விளைவால் பசில்
தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில்,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன்
பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என
தெரிவிக்கப்படுகிறது. கிழக்கின் நவோதயம் என்ற
திட்டத்தை முன்னெடுத்து கிழக்கு அபிவிருத்த
பசிலே முழுமையாகத் தலைமை தாங்கிக்
கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் நாமல்
ராஜபக்ச திடீரென
மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சென்று தேர்தல் பிரசாரப்
பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்த அத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆளும்
தரப்புடன் போட்டியிடுவதற்கு இணங்கச்
செய்யும் வகையில் பசில் ராஜபக்ச சரியாக
செயற்படவில்லை என நாமல் நாமல் ராஜபக்சவும்
மஹிந்தவின் மனைவி சிரந்தியும் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறான குடும்பத்தாரின் விசனத்தில் மனம்
உடைந்து போயுள்ளாராம் பசில்.
« PREV
NEXT »

No comments