Latest News

September 26, 2012

யாழ் சங்கானையிலுள்ள செலான் வங்கிக் கிளைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
by admin - 0

யாழ் சங்கானையிலுள்ள செலான் வங்கிக்
கிளைக்கு முன்பாக
தற்போது வங்கி வாடிக்கையாளர்கள்
ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி வங்கியில் தமது தங்க
நகைகளை அடகு வைத்த
பொதுமக்களே ஒன்று திரண்டு தற்போது ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளதாக சங்கானையிலுள்ள சங்கதி24ன்
செய்தியாளர் தெரிவித்தார். சிறிலங்காவிலுள்ள வங்கிகளில் பணியாற்றும்
உத்தியோகத்தர்கள் பெரும் மோசடிகளில்
ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரும்
பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வங்கிகளில் பொதுமக்கள் அடகு வைக்கின்ற
நகைகள் மற்றும் மக்களின் பெரும் தொகைப் பணம் என்பவற்றைச் சுறுட்டிக்கொண்டு சில
வங்கி உத்தியோகத்தர்கள் தலைமறைவாகிய
நிலையில் தற்போது சங்கானையிலுள்ள செலான்
வங்கியிலும் இது போன்றதொரு சம்பவம்
இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட
வாடிக்கையாளர்கள் தற்போது வங்கிக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில்
ஈடுபட்டுவருகின்றனர். மேற்படி வங்கியில் தமது பெறுமதி மிக்க தங்க
நகைகளை அடகு வைத்து குறிப்பிட்டளவான
பணத்தைப் பெற்ற பொதுமக்கள்
தமது நகைகளை மீட்கச்
சென்றபோதே அங்கு தமது நகைகள்
காணாமற்போயிருந்தமை தெரியவந்தது. நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக
கேள்வியுற்ற ஏனைய வாடிக்கையாளர்களும்
வங்கிக்குச் சென்று தமது நகைகளைப்
பார்த்தபோது பலரின் நகைகள் காணாமற்
போயிருந்தன. இந்த
நிலையிலேயே தமது நகைகளை உடனடியாக மீளத் தருமாறு கோரி வங்கிக்கு முன்பாக
தற்போது மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, யுத்தம் நீக்கப்பட்டதைத்
தொடர்ந்து யாழ் குடாநாட்டில் ஏராளமான
வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள்
குடாநாட்டிலுள்ள மக்களின் பெரும்தொகைப்
பணத்தைக்
கொண்டு சென்று தென்னிலங்கையிலேயே முதலீடு செய்கின்றன. யாழ் குடாநாட்டில் அந்தப்
பணத்தை முதலீடு செய்தால் இந்தப்
பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்ய முடியும்
என்பதுடன் தமிழ் இளைஞர்
யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்க
முடியும். ஆனால் இங்குள்ள அரச, தனியார் வங்கிகள் அனைத்தும் யாழ் மக்களின்
பணத்தை தென்னிலங்கையில் முதலீடு செய்வதால்
யாழ் மக்கள் தொடர்ந்தும்
பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments