Latest News

August 08, 2012

யாழில் புதிய வீச்சுடன் உதயமாகியது நம்தேசம் பத்திரிகை! (பட இணைப்பு)
by admin - 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்
யாழ்ப்பாணத்தில் நம்தேசம் என்ற மாதம்
இருமுறை வெளிவரும்
பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியப் பூவான கார்த்திகைப்
பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன்
இப் பத்திரிகை உதயமாகியுள்ளது. தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை,
சுயநிர்ணயம் இந்த மூன்றையும்
தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும்
கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணி தமிழ் மக்களின் நிலங்கள்
அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மூல
கர்த்தாவாக இருந்தமையும்
குறிப்பிடத்தக்கது. நம்தேசம் பத்திரிகையின் ஆரம்ப நிகழ்வுகளில்
தமிழ் தேசியத்துக்கான மக்கள்
முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அவர்கள்
கலந்துகொண்டு பத்திரிகையின்
பிரதிகளை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
கட்சியின் பொதுச்செயலாளருமான,
செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்
தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முக்கிய
பிரமுகர்களும் நிகழ்வுகளில்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். இனி “நம் தேசம்”சிங்களப் பேரினவாதிகளின்
அடக்குமுறைகளை உலகின்
காதுகளுக்கு உரத்துச் சொல்லும்.
« PREV
NEXT »

No comments