காத்தான்குடி பிரதேசத்தில் அரபு நாடுகள் போன்று அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியி பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் 62 பேரீத்தம் மரங்கள் அண்மையில் நடப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிமான பேரீத்த மரங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியதையடுத்து அதனை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தலைமையில் 27வது பேரீத்த மரத்தில் அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பேரீத்த பழங்ளை அறுவடை செய்யும் நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்தர்தி முரளிதரன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சரின் செயலாளர் றுஸ்வின், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
1 comment
மிக மகிழ்வான செய்தியைப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!, இலங்கை உலர் வலயம் அதிகமுள்ள நாடு, இவ்வளவு சிறப்பான அறுவடை தருமானால் பேரீந்தை அந்த நிலமெங்கும் நட்டுப் பயன்பெற தோட்ட அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுக்கலாம்.
மந்திரி பேரீந்து அறுவடை செய்யும் படத்தைப் பார்த்தபோது ,இதைக்கூட மந்திரியா? செய்து படமாகப் போடவேண்டுமென்ற எண்ணம் உதிக்கத் தவறவில்லை. நமது மந்திரிகளின் விளம்பர மோகம் சிரிப்பை வரவைக்கிறது.
இங்கு என் சிங்கள நண்பர் நம் அரசியல்வா(வியா)திகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, நகைச்சுவையாக
"அரசாங்கம் கக்கூசு கட்டினாலும், அதில் தாங்கள் முதல் "பிஸ்" அடித்து அதைப் படமெடுத்துப் பத்திரிகையில் போட ஆசைப்படும் ,விவஸ்தையற்றவர்களாம்.
இப்படத்தை பார்க்கும் போது உண்மைபோல் தான் உள்ளது.
Post a Comment