
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
துப்பாக்கி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறதாம். கடைசி கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது விஜயின் கால்மூட்டில் அடிபட்டது. இதைனையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் லண்டனில் இருக்கிறார். அங்கு அவர் கால்மூட்டில் அடிபட்டதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜய் மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்து இருந்தார். காலில் அடிபட்டதால் அவ்விழாவுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
துப்பாக்கி படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று சமீபத்தில் சென்னை நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது போன்ற சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படத்தில் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஆகஸ்ட் 15 – அன்று திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
No comments
Post a Comment