Latest News

June 11, 2012

தட்டிக் கேட்க ஆளில்லை எண்டால் நாட்டில இப்படித்தான்; அதிகார பலத்தின் எதிரொலி
by admin - 0

வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்களை தமது ஹயஸ் வாகனத்தால் மோதி அவர்களை விபத்துக்கள்ளாக்கியது மட்டுமல்லாமல் நடு வீதியில் வைத்தே அவர்களை தாக்கிவிட்டு வீதியில் விழுந்திருந்த அவர்களது மோட்டார் சைக்கிளுக்கு மேலால் தமது வாகனத்தை ஏற்றிய கொண்டு கும்பல் ஒன்று தப்பித்துச் சென்ற சம்பவம் இன்று பிற்பகல் யாழ். திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்துத் தெரியவரவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவரை ஹயஸ் வாகனத்தில் அதே வீதியால் வந்து கொண்டிருந்த 8 பேர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தமது வாகனத்தினால் மோட்டார் சைக்கிளில் மேதி அவர்களை விபத்திற்குள்ளாக்கிவிட்டு வாகனத்தில் இறங்கி அவர்கள் இருவரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த ஹயஸிற்கு வழிவிடவில்லை என்ற காரணத்தினாலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தவுடன் ஹயஸையும் அதிலேயே நிறுத்தி விட்டு அதன் சாரதி இறங்கி அவர்கள் இருவருக்கும் சரமாரியாக தாக்குதல் நடாத்திய வேளை மற்றைய 7பேரும் இறங்கி அவர்களும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை துறத்தித் துரத்தி அடித்தனர். அது மட்டுமல்ல அவர்களுக்கு அடிப்பதற்கு பக்கத்தில் இருந்த இரும்பு ஒன்றினையும் கழற்ற முயற்சி செய்தனர்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அனைவரும் ஹயஸில் எறிச் சென்றுவிட்டனர் அப்போது யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பொலிஸார் அவர்களை பின் தொடர்ந்து துரத்திச் சென்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தெரியாது எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஹயஸில் வந்தவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் போல தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

அதே வேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இப்பிடி துணிஞ்சு றோட்டில இறங்கி பயமில்லாமல் 8 பேரும் இவ்வளவும் செய்யுறாங்கள் எண்டா இராணுவத்திற்கோ அல்லது பொலிஸிற்கோ சேர்மதியானவங்கள் தான் அதில எந்த மாற்றமும் இருக்காது. இப்ப மனித நேயம் என்றதே இல்லாமல் போச்சு என சம்பவ இடத்தில் நின்ற ஒருவர் கூறிக்கொண்டு நின்றது என்காதில் கேட்டது.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் உண்மை என்றும் தமக்கு இது தொடர்பான மேலதிக தகவலை வழங்கும் அனுமதி இல்லையென்றும் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துக் கொண்டனர்.

« PREV
NEXT »

No comments