வவுனியா மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளை அரச வேலைக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பொருட்டு நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன.
நேர்முகத் தேர்வுக்கான பட்டதாரிகள் பட்டச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் நிழல்படப் பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதி, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி மற்றும் நிழல் பிரதி, பட்டப்பின் படிப்புச் சான்றிதழ் (இருப்பின்) அதன் மூலப் பிரதி, நிழல் பிரதி, வாக்காளர் பெயர்ப்பட்டியலின் இறுதி மூன்று வருடப் பிரித்தெடுப்பு ஆகியவற்றுடன் வருகை தருமாறு அரச அதிபர் அறிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் சுமார் 325 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது என்றும் அதற்குரிய நேர்முகத் தேர்வுக் கடிதங்களை உரியவர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments
Post a Comment