Latest News

June 06, 2012

டெங்கு! முதல் ஐந்து மாதங்களில் 11 ஆயிரம் பேர் பாதிப்பு: 59 பேர் பலி
by admin - 0




இவ்வருட்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 56 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை 11473 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் அனேகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு இன்று (06) அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் தங்கள் சுற்றுச்சூழலை டெங்கு நுளம்பு பரவாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

2012ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 9,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 2011ம் ஆண்டு முதல் காலாண்டில் 3,103 டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் 50 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் டெங்கு ஒழிப்பு வாரத்தை ஏற்படுத்தி சோதனைகள் செய்து தண்டப்பணம் அறவிட்டு சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் டெங்கு நுளம்பு பரவுவதை குறைக்க முடியாதுள்ளது.
« PREV
NEXT »

No comments