Latest News

April 15, 2012

அஜீத்துடன் போட்டியா? - விஜய் பதில்
by admin - 0


அஜீத்துக்கும் எனக்கும் சினிமாவில் நீயா நானா போட்டி இருந்தாலும், நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைப்பதோடு, சமயத்தில் எல்லை மீறி அடிதடி வரை போகின்றனர்.

அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். இருவர் படங்கள் குறித்தும் பேசுவோம்.

அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நல்ல நண்பர்கள்," என்றார்.

இப்போது துப்பாக்கி படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்து கவுதம் மேனனின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறார்

« PREV
NEXT »

No comments