Latest News

April 09, 2012

ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் : ஒபாமா திடீர் அறிவிப்பு
by admin - 0


ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதை காரணம் காட்டி ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டின.

ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனியும், அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ‘ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று பதிலடி கொடுத்தனர்.எனினும், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ‘‘அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்’’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இதனால் அமெரிக்க ஈராணுக்கு அடிபணித்து விட்டதா என்று சொல்ல தோன்றுது

« PREV
NEXT »

No comments