Latest News

April 11, 2012

கரையோரங்களில் வாழும் உங்கள் நண்பர்களுக்கு உடன் அறிவியுங்கள்
by admin - 0



கரையோரங்களில் வாழும் உங்கள் நண்பர்களுக்கு உடன் அறிவியுங்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ...ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும். இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் இதே பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான மிக பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகம், இலங்கை உள்பட உலகம் முழுவதும் 2.3 லட்சம் பேரை பலி கொண்டது நினைவுகூறத்தக்கது. இப்போதும் இந்த நிலநடுக்கத்தால் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது






« PREV
NEXT »

No comments