நடிகர் சிம்பு வேட்டை மன்னன், போடா போடி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். படத்தில் பிஸியாக இருந்தாலும் ஒரு வருடத்தில் திருமணம்செய்துகொள்ளப் போகிறேன் என அறிவித்த சிம்பு, திருமண அறிவிப்பை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதல், கசப்பு ஆகியவற்றிற்குப் பிறகு இருவரின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே பரவியுள்ளது(ஏன்னா வல்லவன் படத்துல அந்த மாதிரி நடிப்பு). நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகர் சிம்பு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு முன் சிம்பு கதை எழுதி இயக்கிய படம் மன்மதன். சிம்புவின் முதல் காதல் கதையைத் தான் மன்மதன் படமாக எடுத்தார் என்றும் பேசப்பட்டது. அடுத்ததாக நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்குப் பிறகு மறுபடியும் என் காதல் கதையை படமாக எடுக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தார்.
பிறகு அதை பற்றி எதுவும் பேசாமல் தனது வேலைகளில் கவனாக இருந்த சிம்பு இப்போது கதை எழுதுவது பற்றி “ ஒரு கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அது என்னை முழுவதும் கவர்ந்துவிட்டது. இன்னும் நிறைய நடக்கிறது. அதை பற்றி பிறகு கூறுகிறேன்” என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார். சிம்புவுடன் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, தன் காதல் கதையையே சிம்பு எழுதிக் கொண்டிருக்கிறார்.
சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டால் சிம்பு எழுதும் கதையில்(தனது கதாபாத்திரத்திலேயே) நயன்தாரா நடிப்பாரா?
No comments
Post a Comment