நடிகை தமன்னாவை சந்திக்கும்
வாய்ப்பு கிடைக்கும். கொக கோலா நிறுவனத்தின்
கூல்டிரிங்கான ஃபேண்டாவின்
தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக
நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஜெனிலியா திருமணமாகிப்
போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
தனது வாடிக்கையாளர்களைக் கவர
ஃபேண்டா புது முயற்சியில்
இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும்
கர்நாடகாவில் விற்கப்படும்
ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும்
வகையில் பரிசுகள்
அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள்
அதிர்ஷ்டசாலியாக இருந்தால்
தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும். ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில
தமன்னா கலந்துகொள்கிறார். அவர்
தனது ரசிகர்களை விளம்பர
நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார்.
தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம். என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?
No comments
Post a Comment