பெண் சகோதரிகள் இருவர்
இன்று காலை தூக்கிட்டும்,
கிணற்றில் குதித்தும்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. சகோதரிகளான ச.கீதாஞ்சலி (வயது42),
ச.சுவர்ணலதா (வயது40) ஆகிய
இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது அறையில் மின்விசிறியில்
தூக்கிட்டு கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனினும் நீண்டநேரம் வெளியே வராமையினால் வீட்டில்
இருந்தவர்கள் சந்தேகத்தில்
அறையை உடைத்து திறந்துள்ளனர். அப்போதே கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த
அவரது சகோதரி சுவர்ணலதா வீட்டின் பின்னாலுள்ள
கிணற்றில்
வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதேவேளை கீதாஞ்சலி கொக்குவில்
இந்துக்கல்லூரி ஆசிரியை எனவும்,
சுவர்ணலதா கொட்டடி நமசிவாயம் வித்தியாலய
ஆசிரியை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தினால் கோண்டாவில்
பகுதி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனையடுத்து கோப்பாய் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்
சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில்
ஒப்படைத்துள்ளனர்.
No comments
Post a Comment