Latest News

April 01, 2012

புதுக்கோட்டை எம்எல்ஏ மரணம்! அதிர்ச்சியில் மயக்கமடைந்த மனைவி
by admin - 0

புதுக்கோட்டை மாவட்டடம் அன்னவாசல் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் ஞாயிறுக்கிழமை (01.04.2012) காலை விபத்தில் மரணம் அடைந்தார்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான கட்சியினரும், அவரது உறவினர்களும் குவிந்தனர்.
முத்துக்குமரன் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு மருத்துவமனைக்கு ஓடிவந்த அவரது மனைவி சுசீலா மருத்துவமனை வாசலில் அவரது உடலை பார்த்து மயங்கி விழுந்தார்.



« PREV
NEXT »

No comments