Latest News

March 03, 2012

கமலின் விஸ்வரூபத்தில் இருந்து இஷா சர்வானி திடீர் விலகல்!
by admin - 0


கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் இருந்து, அப்படத்தின் நாயகி இஷா சர்வானி திடீரென விலகியிருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் கமிட் ஆன சோனாக்ஷி சின்கா விலகிய நிலையில், இஷாவும் விலகியிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் கதைப்படி படத்தில் இரு நாயகிகள். அதில் ஒருவராக இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சூட்டிங் ஆரம்பிக்க தாமதமானதால், சோனாக்ஷி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக பூஜாகுமார் அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இரண்டாவது நாயகியாக இஷா ஷெர்வானி (பிரபல இந்தி நடிகை) நடித்து வந்தார். இந்நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார்.
« PREV
NEXT »

No comments