யாழ். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணம் செய்யவிருந்த பயணி ஒருவர் நேற்று மாலை பௌத்த பிக்கு ஒருவரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நெடுந்தீவுக்குப் பயணம் செய்யக் காத்திருந்த பயணி ஒருவரே குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் பிக்குவால் தாக்கப்பட்டார்.
குறிகாட்டுவான் நயினாதீவு சேவையில் ஈடுபடும் படகு பணியாளர் என நினைத்தே பௌத்த பிக்கு குறித்த நபரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து இன்று குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவையில் ஈடுபடாமல் தமது எதிர்ப்புக் கண்டனத்தை வெளிப்படுத்த இருப்பதாக படகு உரிமையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கச்சதீவுச் சேவைக்கென எடுத்துவரப்பட்டிருந்த சொகுசுப் படகின் இயந்திரத்துக்குள் மண் போடப்பட்டதால் அந்தப் படகு சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படகு பிக்குவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது
No comments
Post a Comment