Latest News

March 02, 2012

கூடங்குளத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவவில்லை: அமெரிக்கா
by admin - 0

வாஷிங்டன்: கூடங்குளத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு உதவவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உதவி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து அளித்த பேட்டியில், அணுசக்தி துறையில் இந்தியா முதலீடு செய்வதை அமெரிக்கா வரவேற்கிறது. அணுசக்திக்கு எதிராக போராட்டம் நடத்த உதவும் தொண்டு நிறுவனங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கள் நாட்டு தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதி வளர்ச்சிக்காகவும், ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படும் என கூறினார்.
« PREV
NEXT »

No comments