Latest News

March 08, 2012

அமெரிக்க உளவுப்பிரிவிடம் ஒசாமாவை மாட்டி விட்ட மனைவி! புதிய தகவலால் பரபரப்பு
by admin - 0

அல்குவைதா இயக்கத் தலைவரான ஒசாமா பின்லேடனின் மனைவிகளுக்கிடையில் நிகழ்ந்த குடுமிச் சண்டை தான் கடைசியில் ஒசாமா பின்லேடனின் உயிர் பறிப்புக்கு காரணமாக இருந்துள்ளது. ஒசாமாவுக்கு மூன்று மனைவிமார்கள் இருந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் இல் உள்ள வீட்டின் மேல் தளத்தில் மூன்றாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒசாமாவின் மூத்த மனைவியும் கீழ்தளத்தில் தான் வசித்து வந்துள்ளார்.

ஆனால் ஒசாமாவுக்கு தனது இளைய மனைவியான அமல்சதா மீது தான் அதிக பாசம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதனால் மூன்று மனைவிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மோதல் நிலைமையும் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவாளிகளுக்கு மூத்த மனைவி தான் காட்டிக் கொடுத்ததாக இளையமனைவி புகார் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் சிறிநீரக நோயால் அவதிப்பட்டதால் 2002 ஆம் ஆண்டு அவருக்கு சிறிநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல் கடலில் வீசப்படவில்லை என்றும் அமெரிக்காவில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை விக்கிலீக்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இல்லம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments