Latest News

March 06, 2012

போதை இளைஞர்களிடம் சிக்கினாரா ப்ரியாமணி?
by admin - 0


சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் நான்கு முரட்டு போதை இளைஞர்களிடம் சிக்கி ப்ரியாமணி படாதபாடு பட்டதாகவும், பின்னர் ஒருவழியாக மீண்டு வந்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

பிரியாமணிக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லையென்றாலும், அடிக்கடி மதுவிருந்து, விழாக்களில் பங்கேற்க சென்னை வந்துவிடுகிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஓரளவுக்கு வாய்ப்புகளும் வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மதுவிருந்தில் பங்கேற்றுள்ளார் ப்ரியாமணி. இந்த விருந்தில் வசதியான, அரசியல் பின்புலமுள்ள பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் நான்கு இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ப்ரியாமணியை வளைத்துப் பிடித்துக் கொண்டனராம். முறைகேடாக அவரிடம் நடந்து கொண்டனராம்.

பெரும் போராட்டம் நடத்திதான் இவர்களிடமிருந்து மீண்டாராம் ப்ரியாமணி. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீளவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சென்னைக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டன. நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நான் கொச்சி சென்று விட்டேன். நீங்கள் குறிப்பிடும் அந்த பார்ட்டியில் பங்கேற்கவில்லை. இப்படியெல்லாம் கூடவா செய்தி பரப்புவார்கள். வருத்தமாக உள்ளது", என்றார்.


உடனடிப்பணம் உங்களுக்கு தேவையா இங்கே click
« PREV
NEXT »

No comments