தமிழர்கள்
அனுபவிக்கும்
கொடுமைகளைக்
கண்டித்து சிறையில் இருந்தே உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப் போவதாக சசிகலாவின் கணவர்
நடராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின்
கணவர் நடராஜன் நில அபகரிப்பு மற்றும்
பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட
வழக்கில்
கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட அவர்,
செய்தியாளர்களிடம் பேசுகையில்
இதனைத் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றம் அமைப்பதற்கான
நிலத்தை மிரட்டி வாங்கினார் என்ற
குற்றச்சாட்டின் கீழ் அவர்
கைது செய்யப்பட்டார். முள்ளிவாய்க்கால் முற்றத்துக்காக
விலை உயர்ந்த கடிகாரம், ஆடம்பர கார்
உள்ளிட்டவற்றை தஞ்சாவூர்
பொதுக்கூட்டத்திலேயே ஏலம்
விட்டு உடனே வசூலித்து அங்கேயே தமிழர்
தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம்
கொடுத்து தம்மை ஈழ ஆதரவாளராக
அடையாளம் காட்டிக் கொண்டார் எம்.
நடராஜன். இப்போது சிறையில்
இருந்தே உண்ணாவிரதம் இருக்கப்
போவதாக அறிவித்திருக்கிறார்.
No comments
Post a Comment