Latest News

March 09, 2012

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை
by admin - 0

ஐநா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


ஜெனீவா சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் மகிந்த சமரசிங்கே உள்ளிட்டோர், ஐநா மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா உள்பட ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை ஜி.எல்.பெரீஸ் சந்தித்து ஆதரவு திரட்டினார். ரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவோடு அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இறுதிக்கட்ட போரின் போது திட்டமிட்டு, பெரிய அளவில் இனப் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தில் கூறப்படவில்லை என்று கூறியுள்ள இலங்கை தூதர் கருணாநாயகம், இதன் மூலம் உலகத்திற்கு அமெரிக்கா சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று கேள்வி எழுப்பியுளளார். இலங்கையின் உண்மை நிலையை மேற்கத்திய நாடுகள் ஆய்வு செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளித்ததற்காக இலங்கையை தண்டிக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது எந்த நிலைப்பாட்டை மேற்கொள்வது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments