கோச்சடையான் படப்பிடிப்பு இன்று தொடங்கும் என்று படக்குழு கூறிவந்தது. ஆனால் அறிவித்தபடி இன்று படப்பிடிப்பு தொடங்கவில்லை. படம் குறித்த விளம்பரங்களோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ எதுவும் இன்று வெளியாகவில்லை.இதனால் ரஜனி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, படத்தின் ஷூட்டிங் இன்று இல்லை என்றும், அடுத்த வாரத்தில் நடக்கும் என்றும் கோச்சடையான் படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் உறுதியான தேதி எதையும் தெரிவிக்கவில்லை. இன்னும் ஓரிரு நாளில் அதுகுறித்த அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றனர்.கோச்சடையான் புதிய ஸ்டில்களும் விரைவில் வெளியாகும் என்றனர்.இப்படியாக படப்பிடிப்பு தள்ளிபோய்க்கொண்டு போகிறது.படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முழுமையடைந்துவிட்டதாகவும், பொருத்தமான நாள் பார்த்து கொண்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் படம் ஜப்பானிய மொழியிலும் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது, வழக்கத்துக்கு மாறாக தமிழ்ப் பதிப்பு வெளியாகும்போதே, ஜப்பானிய மொழியிலும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
No comments
Post a Comment