Latest News

March 03, 2012

கமலுக்காக காத்திருக்கும் மும்பை படவிழா!
by admin - 0

கமலஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதிகளை அழிக்கும் படையின் கமாண்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகுல் போசை எப்படி அழிக்கிறார் என்பதுடன் கதை முடிகிறதாம இந்தி பட இயக்குனரான ஷேகர் கபூரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளாராம் கமல்.”எலிசபெத் - த கோல்டன் ஐ” உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் ஷேகர் கபூர். மும்பையில் நடக்கும் கேன்னஸ் பட விழாவில் விஸ்வரூபம் படத்தை திரையிடுமாறு விழாக் குழுவினர் கேட்டார்களாம். இதை பற்றி பேசிய கமல் “ அவர்களுக்காக நான் என் படத்தை அவசரமாக முடிக்க முடியாது. படம் முடிகிற நிலையில் தான் உள்ளது. என்னால் முடிந்த வரையில் இந்த பட விழாவில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிப்பேன்” என்று கூறினார். இதுவரை இல்லாத வகையில் கேன்னஸ் விழாக் குழுவினர் தங்களது வரைமுறையை மாற்றி பட விழா காலத்தை 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தை வெளியிடத் தான் இது போல் விதிகளை மாற்றியுள்ளனர் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் விஸ்வரூபம் வெளிவந்து எந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது என்பது படம்
வெளியானால் தான் தெரியும்....
« PREV
NEXT »

No comments