யுவன் ஷங்கர் ராஜா தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் பல வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. அதன் பின் வந்த படங்களில் இருவரும் இணையவில்லை.
தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு யுவன் இசையமைத்த போது செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் யுவன் படத்திலிருந்து விலகிக் கொண்டார். யுவன் ஷங்கர் ராஜாவும் தனுஷும் இணையாததற்கு இந்த மோதலும் காரணமாக பேசப்பட்டது.
யுவனுடன் மறுபடியும் இணைவீர்களா என்று கேட்ட போது தனுஷ் “யுவனின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். ஏனென்றால் என் முதல் படத்திற்கு
இசையமைத்தவர் யுவன். நாங்கள் இருவரும் விரைவில் இணைவோம். பல கதைகளை கேட்பதால் படங்களை முடிவு செய்வதில் குழப்பமாக இருக்கிறது. ஆனாலும் அதில் கவனமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
தனுஷ் நடித்து வெளிவரும் படமான 3 தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ரிலீஸாகிறது. தனது படம் மூன்று மொழிகளில் ரிலீஸாகும் அளவிற்கு தனுஷின் இமேஜ் உயர்ந்துவிட்டது. தனுஷ் இந்தியில் ”ராஞ்னா” என்ற படத்தில் நடிக்கிறார்.
படத்திற்கான ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இந்தியில் நடிக்கும் அளவிற்கு தனுஷ் வளர்ந்துவிட்டதால் தனுஷிடமிருந்து பிரம்மாண்டமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இனி தனுஷ் செலக்ட் செய்யும் கதைகள் எந்த மாதிரி இருக்கும் என்பது தெரியவில்லை.........
No comments
Post a Comment