குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் வெளி உலகத்திற்கு வர ஆரம்பித்துள்ளார் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய். நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமான பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகும் ஐஸ்வர்யா, பொது நிகழ்ச்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு போன்றவற்றை தவிர்த்து குழந்தையே உலகம் என்ற நினைப்போடு வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெளி உலகுக்கு வர ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த ஜெனிலியா-ரித்தேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மாமனார்-மாமியாருடன் பங்கேற்றார். பச்சை கலர் சல்வாரும், புளூ கலர் துப்பட்டாவும் அணிந்தபடி ரொம்ப கலர்புல்லா, முன்பை விட சற்று உடல் பெருத்து, கூடுதல் அழகாக காட்சியளித்தார் ஐஸ்வர்யா.
இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், விரைவில் திரையிலும் தோன்ற உள்ளார்.
No comments
Post a Comment