Latest News

February 12, 2012

நயன்தாரா பற்றி கேள்வி: 'பேச விரும்பவில்லை' - பிரபு தேவா பதில்
by admin - 0


ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பிரபு தேவாவிடம், நயன்தாரா பற்றி கேள்வி எழுப்பினர் நிருபர்கள். 'அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று பதிலளித்தார் பிரபு தேவா.

பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா நேற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள், சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர்.

இந்திப்படத்தில் கதாநாயகன்

காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், "தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். `ரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15-ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.

நயன்தாரா பற்றி கேள்வி...

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு 'நோ கமெண்ட்ஸ். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை' என கூறி விட்டு வேகமாக சென்Jejd.

பின்னர் அவர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகே உள்ள முதியோர் ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கடந்த ஆண்டு இதே கோயிலில் நயன்தாராவும் பிரபு தேவாவும் ஜோடியாக வந்து இந்த பூஜையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments