அழகுதான் எனக்கு விசிட்டிங் கார்டு என்று நடிகை அசின் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில் ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகான நடிகைகள் பட்டியலில் அசினுக்கு 17வது இடத்தை பிடித்திருக்கிறார். முதல் 10 இடங்களை ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ள நிலையில், பாலிவுட்டில் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அசின் 17 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேநேரம் அசினுக்கு முன்பாக 15வது இடத்தை ஸ்ரேயாவும், 16வது இடத்தை ஸ்ருதிஹாசனும் பிடித்துள்ளனர். அஞ்சலி, அமலா பால் போன்ற அழகு நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெறவே இல்லை.
இந்த கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அசின், கருத்துக் கணிப்பால் நடிகைகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை. பாலிவுட்டில் வாய்ப்பு தேட அழகும் திறமையும்தான் விசிட்டிங் கார்டு. இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேட முடியாது" என்று கூறியிருக்கிறார்.
No comments
Post a Comment