Latest News

February 08, 2012

சல்மான்... அவருடன் திருமணம் இல்லை! - அசின்
by admin - 0


சல்மான்கான் என்னைவிடப் பெரியவர். அவருக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள். அவருடன் எனக்கு திருமணம் என்பது வெறும் வதந்தி, என நடிகை அசின் கூறியுள்ளார்.

நடிகை அசினுக்கும், நடிகர் சல்மான்கானுக்கும் திருமணம் நடக்கப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அசின்-சல்மான்கான் இருவரும் 'லண்டன் ட்ரீம்ஸ்,' 'ரெடி' ஆகிய 2 இந்தி படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து அசின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கேரளாவை சேர்ந்த பெண். சம்பிரதாய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். என் திருமணம், எங்கள் குடும்ப சம்பிரதாயப்படி, நான் பிறந்த ஊரான கேரளாவில்தான் நடைபெறும்.

நான், இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதில், சல்மான்கானும் ஒருவர். அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

சல்மான்கான் என்னை விட, வயதில் பெரியவர். அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் கியூவில் நிற்பார்கள். சிலர் கற்பனை செய்கிற மாதிரி எனக்கும், சல்மான்கானுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.

4 வருடங்களுக்கு பிறகுதான் திருமணத்தை பற்றி நான் யோசிப்பேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments