Latest News

February 17, 2012

நடிகர் அஜீத் படப்பிடிப்பில் சலசலப்பு - பரபரப்பு
by admin - 0


சம்பள பிரச்னை காரணமாக தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் பாதித்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங் மட்டும் வெளியூர்களில் நடக்கிறது.


அஜீத் நடிக்கும் ‘பில்லா 2’ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.



இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், ‘தமிழ் படவுலகம் ஸ்டிரைக்கில் இருக்கிறது. உங்கள் பட ஷூட்டிங்கை எப்படி நடத்தலாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்துங்கள்’ என்று கூறி முற்றுகை யிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, ‘‘இப்படத்தில் விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம்.

சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது.


சம்பள பிரச்னையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை.

நீண்ட நாட்களுக்கு முன்பே ‘பில்லா 2’ பட ஷூட்டிங் தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரையுலக பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் ஷூட்டிங் நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.


இதுபற்றி பெப்சி பொதுச் செயலாளர் ஜி.சிவா கூறும்போது, ‘‘எந்தவொரு நிலையிலும் பெப்சி அமைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. தயாரிப்பாளர்கள் தங்கள் ஷூட்டிங் தொடரலாம். ஆனால் கோலிவுட்டில் தற்போது நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது முதல் வேலை ஆகும்’’ என்றார்.

இந்நிலையில் பெப்சி, தயாரிப்பாளர்களுக்கு இடையே இன்று தொழிலாளர் துறை ஆணைய அதிகாரிகள் 3ம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments