ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடராஜனை அழைத்துச்சென்றது போலீஸ்.
நில அபகரிப்பு தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.
தஞ்சாவூரைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசியின் கணவரையும் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment