Latest News

February 17, 2012

ரஜினியுடன் நடிக்காதது ஏன்? - கத்ரீனா விளக்கம்
by admin - 0


ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப்.

கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப்தான் முதலில் அறிவிக்கப்பட்டார். தனது கால்ஷீட்களை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவருக்குப் பதிலி தீபிகா படுகோன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கத்ரீனா விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து கத்ரீனா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கோச்சடையானுக்கு 20 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் என்றார் சௌந்தர்யா. அதற்காக எனது மற்ற பட ஷூட்டிங்குகளை எந்த அளவு அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று பார்த்தேன். அடுத்து நான் ஷாரூக்கான் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் காரணமாக அடுத்த 10 மாதங்கள் எங்கும் நகர முடியாத நிலை. உலகின் வேறு வேறு பகுதியில் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நடக்கும் நிலையில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

கோச்சடையான் உயர்ந்த தொழில்நுட்பம் நிறைந்த படம் வேறு. எனவேதான் நடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் படமொன்றில் நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிப்பேன்," என்றார்.
« PREV
NEXT »

No comments