Latest News

February 09, 2012

நாட்டைவிட்டு வெளியேறியது மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத் குடும்பம்: இலங்கையில் தஞ்சம்
by admin - 0

மாலத்தீவை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் நசீத் இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ளார்.

இத்தகவலை நசீத்தின் மனைவி உறுதிபடுத்தியதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சம் கோருவது தொடர்பாக மாலத்தீவை விட்டு வெளியேறும் முன்பு மகிந்த ராஜபக்சவிடம் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மாலத்தீவு புதிய அதிபர் வகீத்திடம் பேசிய ராஜபக்ச, நசீத் குடும்பத்தினரை பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் தெரிகிறது.

இதனிடையே தாம் துப்பாக்கி முனையில் பதவி விலக வைக்கப்பட்டதாக நசீத் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments