1996ம் ஆண்டு இலங்கை வெற்றிகொண்ட உலகக் கிண்ணம் மற்றும் ஏனைய 30 செம்பியன் கிண்ணங்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு கொழும்பில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகக் கிண்ணம் சேதமடைந்ததாக தவறான தகவல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (16) அறிவித்துள்ளது.
குறித்த கிண்ணங்கள் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதெனவும் அதனை ஊடகவியலாளர்கள் நேரில் கண்டறிய முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment