Latest News

February 03, 2012

ஹன்சிகாவின் கன்னதில் அறைந்த நயன்தாரா
by admin - 0


ஊரெல்லாம் பிரபு தேவாவும் ஹன்ஸிகாவும் லவ்வுறாங்கோ... அதான் நயன்தாரா கோவிச்சிக்கிட்டு ஒதுங்கிடுச்சி' என்று கூவிக் கொண்டிருக்க, பிரச்சினைக்குரிய ஹன்ஸிகாவோ, பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என சென்டிமென்ட்டாக உருகியுள்ளார்.

பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

ஹன்சிகா நடிப்பை பொது நிகழ்ச்சிகளில் பிரபுதேவா வெகுவாக புகழ்ந்தார். அதுபோல் ஹன்சிகாவும் பிரபுதேவா திறமையான இயக்குனர் என பாராட்டினார். படம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்ததாக கூறப்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதாகவும் செய்தி பரவியது.

ஹைதராபாத் ஓட்டலில் ஹன்ஸிகாவின் பிறந்த நாளை விடிய விடிய பிரபு தேவா கொண்டாடியதாகவும், விஷயம் கேள்விப்பட்டு நேராக ஓட்டலுக்குப் போய் ஹன்ஸிகாவுக்கு நயன் பளார் விட்டதாகவும் கூட செய்திகள் வந்தன.

இந்த நிலையில், நயன்தாரா - பிரபு தேவா பிரிந்ததற்கு தான் காரணமில்லை என்று ஹன்ஸிகா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் என்னை இணைத்து பேசுவது வேதனை அளிக்கிறது. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி. அண்ணனையும் சகோதரியையும் இணைத்து பேசுவது தப்பில்லையா... தயவுசெய்து என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் தலையிடமாட்டேன்," என்றார்.


click here for .......
100 டாலர் ஒருநாளைக்கு உழைக்கலாம் வாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்
Get cash from your website. Sign up as affiliate.




« PREV
NEXT »

No comments