Latest News

February 02, 2012

அஜீத் ஜோடியாக நயன்தாரா!
by admin - 0


பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா.

பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

இத்தனை நாளும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட பிரபு தேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ரூ 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்களில் அவர் பிசியாக இருப்பதால் வேறு நாயகி தேடினர். அஜீத்துடன் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, அஜீத் ஜோடியாக நயன்தாராவிடம் பேசியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவரிடம் இன்னும் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை, என்றார். அஜீத்தும் நயன்தாராவும் ஏற்கனவே பில்லா, ஏகன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.Get cash from your website. Sign up as affiliate. 100 டாலர் ஒருநாளைக்கு உழைக்கலாம் வாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்
« PREV
NEXT »

No comments