Latest News

February 05, 2012

போலி வைத்தியர்களை 5 வருடங்கள் சிறையில் தள்ள விரைவில் வருகிறது சட்டம்
by admin - 0


போலி வைத்தியர்களாக சமூகத்தில் நடமாடுபவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்க தற்போதுள்ள நீதிக் கட்டமைப்பில் திருத்தங்களை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வைத்தியர்கள் என்று அவர்கள் தங்களை கூறினாலும் வைத்திய தொழில் தெரியாதவர்கள் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களிடம் வைத்தியம் பார்ப்பதால் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் குறித்த போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நீதி அடிப்படையில் போலி வைத்தியர்களுக்கு தண்டப்பணம் மாத்திரமே அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது போதாத தண்டனை எனவும் போலி வைத்தியர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை வழங்கக்கூடிய வகையிலான நீதிக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments