Latest News

February 18, 2012

கோச்சடையான் - பரபர பிஸினஸ் - தெலுங்கு உரிமைக்கு மட்டும் ரூ 30 கோடி!
by admin - 0


ரஜினியின் அனிமேஷன் 3 டி படமான கோச்சடையானுக்கு இதுவரை இந்திய சினிமா உலகம் பார்த்திராத அளவுக்கு விலை கொடுக்க அனைத்து மொழி விநியோகஸ்தர்களும் தயாராகி வருகின்றனர்.

ஒரு படம் பூஜை போடப்படும்போதே விற்று, லாபம் பார்க்கிறதென்றால் அது ரஜினி படம் மட்டுமே. காரணம், ரஜினி படம் தப்பு பண்ணாது என்ற நம்பிக்கை ஒருபக்கம்... அப்படியே நஷ்டம் என்றாலும் ரஜினி திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நினைப்பு மறுபக்கம்.

'கோச்சடையான் ' படத்துக்கும் இப்போது ஏக கிராக்கி. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்கிறார்.

இந்தியாவில் முதன் முறையாக பர்மார்மன்ஸ் கேப்சரிங் செய்யப்படும் படம் இதுவே. அவதார், டின் டின்னுக்கு அடுத்து சர்வதேச அளவில் உருவாகும் பெரிய படம் கோச்சடையைன் என்பதால் சர்வதேச அளவிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது.

படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாள ஏரியா உரிமைகள் பெரும் விலைக்கு கேட்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், டப்பிங் உரிமைக்கே 30 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்து இருக்கிறார். கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது. எந்திரன் படம் தெலுங்கில் ரூ 45 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி மற்றும் தமிழ்ப் பட உரிமைகளையும் சேர்த்தால், இந்திய சினிமா வர்த்தகத்தில் இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று வாய்பிளக்கிறார்கள் சினிமா வர்த்தகர்கள்.
« PREV
NEXT »

No comments