பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் 150 கிலோ எடையுள்ள பைக்கைத் தூக்கி அசத்தியுள்ளார்.இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு பைக் என்றால் உயிர். எந்த பைக் பற்றி எப்பொழுது கேட்டாலும் அசராமல் பேசுவார். தற்போது அவர் போர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில் பைக்கைத் தூக்க வேண்டும் என்று இயக்குனர் நிஷிகாந்த காமத் ஜானிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜானும் ஓகே சொல்லிவிட்டார்.
இது குறித்து படத்தி்ன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியதாவது,
பைக்கைத் தூக்கியபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஜானை பைக்கைத் தூக்குமாறு கூறியுள்ளதாக இயக்குனர் தெரிவித்ததற்கு நான் வேண்டாம் என்றேன். அவ்வாறு செய்தால் ஜானுக்கு முதுகிலோ, முழங்காலிலோ காயம் ஏற்படலாம் என்றேன். ஆனால் இயக்குனருக்கு ஜான் மீது நம்பிக்கை இருந்தது.
ஜான் திடகாத்திரமானவர். சில காட்சிகளுக்கு நாங்கள் கயிறை பயன்படுத்தினோம். ஆனால் பைக் காட்சியில் பயன்படுத்தவில்லை. ஜான் தானாக பைக்கைத் தூக்கி அசத்தினார் என்று ஸ்டண்ட் இயக்குர் தெரிவித்தார். பிபாஷா பாசுவை தனது மனதில் பல காலமாக நிறுத்தி வைத்திருந்தவருக்கு பைக் ஒரு பெரிய விஷயமா
No comments
Post a Comment