சிதம்பரம் மேலவீதி அண்ணா சிலை அருகில் சீமான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் 7 பேர் துடப்பத்துடன் நின்று கொண்டிருப்பதாக நகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர்கள் மணியரசன், நந்தினி, பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமாறன்,
வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பழனி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சுரேஷ், நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சசிகுமார், கிராம குழு தலைவர் தயாளன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
No comments
Post a Comment