Latest News

January 15, 2012

இலங்கையில் இந்திய பிரஜை கைது
by admin - 0

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்தியரிடம் இருந்து 40000ம் ரூபா பெறுமதியான புடவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்கென களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments