தமிழர் கலை இலக்கிய விழா நேற்று துவங்கியது. விழாவை கண்காணிக்கும் பணியில் உளவுப்பிரிவு போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவில் முக்கிய அ.தி.மு.க., நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆயினும், சில அ.தி.மு.க., தொண்டர்கள் பட்டு வேட்டியில் வந்திருந்தனர். அவர்கள் யார் என்று கண்டறிய முடியாமல் உளவுத்துறை, தனிப்பிரிவு போலீசார் திணறினர்.
விழாவுக்காக தஞ்சை நகர் முழுவதும், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், "பட்டம் இல்லாத பேரரசனே' என்று, நடராஜனை குறிப்பிட்டிருந்தனர்.
"மிக்க துணிவு உண்டு; இளைஞர்கள் பக்கத் துணையுண்டு; உடன் வர மக்கள் படையுண்டு; முடிவெடு தலைவா!' என்ற, உச்சக்கட்ட வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
நகர் முழுவதும் இருந்த பிரமாண்ட பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்யவில்லை.இதனால், சசிகலா தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மேடையில் பேசிய நடராஜன், ’பொங்கல் விழாவுக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்து சொல்ல, கோல் கட்டாவிலிருந்து பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகனும், கார்கில் போரில் போரிட்ட கேப்டன் அருண் சக்கரவர்த்தியும் வந்துள்ளனர்.
நீங்க நினைக்கும் கேப்டன் இவர் அல்ல; இவர் உண்மையான கேப்டன்’ என்று விஜயகாந்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
No comments
Post a Comment