நடிகர் மாதவன்,பேட்டி
கேள்வி:- `வேட்டை’ படத்தில் நீங்கள் பயந்த சுபாவம் உள்ளவராக நடித்து இருக்கிறீர்கள். நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி, பயந்த சுபாவமா, தைரியமானவரா?
பதில்:- நிஜ வாழ்க்கையில், நான் பயந்த சுபாவம் அல்ல. வீண் சண்டைக்கு போகமாட்டேன். வந்த சண்டையை விடமாட்டேன். நான் சின்ன வயதில் பீகாரில் வளர்ந்தேன். அங்கே, அடிக்கடி சண்டை நடக்கும். அதைப்பார்த்து, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் பக்குவப்பட்டு விட்டேன். சண்டையைப் பார்த்து பயப்பட மாட்டேன். அடிதடி சண்டைக்கும் போகமாட்டேன்.
கேள்வி:- உங்களுக்கு ஜோடியாக எத்தனையோ கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சமீராரெட்டி எப்படி, உங்களுக்கு பொருத்தமானவராக இருந்தாரா?
பதில்:- `வேட்டை’ படம், அண்ணன்-தம்பி கதை. ஒரு ஜோடியை பற்றிய படம் அல்ல. அந்த படத்தில் சமீராவின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. தம்பி ஆர்யாவுடன் சண்டை போடுகிற காட்சியிலேயே அது தெரியும். அவருடன் நடித்தது, சந்தோஷமாகவே இருந்தது. சமீரா, ரொம்ப அழகானவர். கடினமாக உழைப்பார்.
கேள்வி:- அதே படத்தில் நடித்த அமலாபால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- படப்பிடிப்பின்போது என்னை அவர் சுற்றி சுற்றி வந்தார். `சைட்’ அடிக்கிறார் போல என்று நினைத்தேன். ஆனால், என்னை அவர் ஏமாற்றி விட்டார். நடிப்பை கற்றுக் கொள்வதற்காகவே என்னை சுற்றி சுற்றி வந்ததாக கூறிவிட்டார். அமலாபாலிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.
கேள்வி:- உங்களுடன் நடித்த கதாநாயகிகளில், உங்களுக்கு மிக பொருத்தமானவர் யாரை சொல்வீர்கள்?
பதில்:- ஷாலினி. துறுதுறு என்று இருப்பார். நிஜமாகவே அவர் சுபாவம் அப்படித்தான். என் படத்தின் கதாநாயகிகள் வெறும் பாடலுக்கும், டான்சுக்கும் மட்டும் பயன்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களின் கதாபாத்திரமும் கனமாக இருக்கும். அந்த வகையில், ஷாலினி நல்ல நடிகை.
கேள்வி:- எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை?
பதில்:- நானும், பிபாஷாபாசுவும் `ஜோடி பிரேக்கர்ஸ்’ (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
கேள்வி:-ஆர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:-படத்தின் கதாபாத்திரங்களைப்போல் நிஜமாகவே நாங்கள் இருவரும் நல்ல அண்ணன்-தம்பியாக மாறிவிட்டோம். அது, படத்தில் தெரியும். எங்களுக்குள் எந்த `ஈகோ’வும் இல்லை. லிங்குசாமி, மிக சிறந்த டைரக்டர். `வேட்டை’ படத்தின் கதையை சொன்னபோதே எனக்கு பிடித்து விட்டது. முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. லிங்குசாமி தன்னம்பிக்கை உள்ளவர். திறமையானவர். ஒரு நடிகருக்கு, அவர் மாதிரி டைரக்டர் கிடைப்பது வரம்.”
No comments
Post a Comment