Latest News

January 16, 2012

இன்று மாட்டுப்பொங்கல்
by admin - 0

பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்று விட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர். பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும் போது, ""பட்டிபெருக பால் பானை பொங்க'' என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளைமாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர். நல்ல மனிதனைக் குறிப்பிடும்போது, "அவனுக்கு பாலைப் போல வெள்ளை மனசு' என்று குறிப்பிடுவர். குழந்தையின் சூதுவாது ஏதும் அறியாத தன்மையை, "பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தை' என்பர். பாலைக் காய்ச்சக் காய்ச்ச தன் சுவையைக் கூட்டுவது போல, நல்லவனுக்கு துன்பம் நேர்ந்தாலும் தன் உயர்ந்த குணத்தை ஒருபோதும் விடுவதில்லை என்று அவ்வையார் நல்லவரை பசும்பாலோடு ஒப்பிடுகிறார். நிலாவினைக் குறிப்பிடும்போது, "பால்நிலா' என்றே சொல்வர். கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் என்றாலே அது "பாலபிஷேகம்' மட்டும் தான். இவ்வாறு உயர்ந்த குணத்தின் பிரதிபலிப்பாக பசுவின் பால் விளங்குகிறது. ஸ்லோகம்: ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா: பவித்ரா: புண்யராஸய:! ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம் காவஸ்த்ரைலோக்ய மாதர:!! பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக. இந்த ஸ்லோகத்தைச் சொல்லியபடி பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும்.
« PREV
NEXT »

No comments