இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பூமியில் சில பகுதிகளில் கதிர்வீச்சு நேரிடலாம்” என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது.
தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரிய அதிர்வலை, இன்று, பூமியைத் தாக்கும் என, ‘நாசா’ தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம், சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம்.
எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment