Latest News

January 22, 2012

கலாம் நாளை வருகிறார்
by admin - 0

யாழ். மாவட்டத்துக்கு நாளை திங்கட்கிழமை வருகை தரும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இங்கு இடம்பெறும் மூன்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.



நாளை மதியம் 11.45 மணி முதல் 12.45 மணிவரையில் யாழ். பல்கலைக் கழகத்தில் "மனநிலையின் ஒற்றுமை' என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார்.

அதன் பின்னர் பிற்பகல் 2.55 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தரும் அவர், அங்கு பிரார்த்தனை மண்டபம் ஒன்றைத் திறந்து வைப்பதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுடன் சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

அத்துடன் "அறிவியல் சமூகத்தின் தோற்றம்' என்னும் தலைப்பில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கருத்துரை வழங்குவார்.
« PREV
NEXT »

No comments