இந்நடவடிக்கையின் ஒரு அங்கமாக இன்று (16) திங்கள் கிழமை உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு அதிகம் பரவும் ஏழாலைப் பகுதயில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வீடு வீடாகச்சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உடுவில் பிரதேச செயலகம் கிராம அலுவர்கள் சமூர்த்தி அலுவலர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பிரதேச சபை அலுவலர்கள் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மருத்துவமாதுகள் சுன்னாகம் பொலிஸார் இராணுவத்தினர் ஏழாலை மகா வித்தியாலய சுகாதாரக் கழக பாடசாலை மாணவர்கள் இணைந்து இன்றைய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
வீடு வீடாகச்சென்று பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் நுளம்பு பரவும் இடங்களை அழிப்பது சம்பந்தமாகவும் அறிவுரைகளை கூறியுள்ளார்கள்.
No comments
Post a Comment