Latest News

January 22, 2012

விவசாயிகளுக்கு தொற்றாத நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளது - அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
by admin - 0

விவசாய துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிநுட்பங்கள் காரணமாக விவசாயிகளுக்கு தற்போது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் பிராந்திய அலுவலகங்கள் மூன்றை திறந்து வைப்பதற்காக இடம்பெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிகரெட் பாவனை சீனி மற்றும் வெங்காயம் போன்றவற்றை உணவில் கூடுதலாக சேர்த்தல் இதற்கு முக்கிய காரணங்களாக அமைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் விவசாயிகள் வயல்களில் இறங்கி கடினமாக உழைத்ததாக கூறிய அமைச்சர் தற்போது நவீன தொழிநுட்ப பாவனையால் இதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments