Latest News

January 19, 2012

அறிவியல் நகரில் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடம் என்பன இயங்கவுள்ளன.
by admin - 0

யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சமர்பித்திருந்தார்.

இதன்படி கிளிநொச்சி - அறிவியல் நகரில் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடம் என்பன இயங்கவுள்ளன.

கடந்த வருடம் ஜூன் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பொறியியல் பீடம் அமைக்க வசதி செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதன்படி கிளிநொச்சியில் பொறியியல் பீடத்திற்கான கட்டடத்தை புனரமைப்பு செய்ய 393.79 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Disqus
« PREV
NEXT »

No comments